கேரள லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் சிறையில் அடைப்பு.

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் நேற்று சிங்காநல்லூர் ஆனையங்காடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளைமறைத்து வைத்து 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.அவர்களை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் ,ரங்கா நகரை சேர்ந்த கமாலுதீன் (வயது 48) உப்பிலிபாளையம் சி.எம்.சி .காலனியை சேர்ந்த சுனில் குமார் ( வயது 19 )என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து24 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.