தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி என்றமணிகண்டன் ( வயது 36) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரைகுண்டர் தடுப்புசட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர்.பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி அடிதடி வழக்கு குற்றவாளியான அமுக்க மணி என்றமணிகண்டன் (36) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.இதே போல மேட்டுப்பாளையம், அண்ணா நகர், நடூர் சத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் மோகன் குமார் என்ற மொக்கை மோகன் (வயது 19) இவர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 23 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.