4 ஏக்கர் 10 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திருடிய 2 பேர் கைது

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் நிலம் மற்றும் வீட்டுமனைகளை அபகரிக்க ஒரு கும்பல் முகமூடி அணியாமல் பல் கலை கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் போல் திருட்டு கும்பல் அலைந்து திரிந்து வருகிறது இது பற்றிய விவரம் வருமாறு சென்னை கோடம்பாக்கம் ராகவ ரெட்டியார் மகன் புருஷோத்தமன் மற்றொருவர் கோபிகிருஷ்ணன் இருவரும் கமிஷனர் சங்கரை குறை கேட்கும் முகாமில் சந்தித்து மனு கொடுத்தனர் இந்த மனு நிலப்பிரச்சனை தீர்வு பிரிவு பகுதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுக்கா கொரட்டூர் பகுதியில் நாலு ஏக்கர் 10 சென்ட் நிலத்தினை ராகவ ரெட்டியார் ராஜேஸ்வரி இருவரும் வெங்கடசாமி ரெட்டியாரிடம் 1974 இல் கிரயம் பெற்று அனுபவித்து வந்தனர் அதன் பின்னர் கோபிகிருஷ்ணன் புருஷோத்தமன் 2012 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொடுத்து அனுபவத்தில் இருந்து வந்துள்ளது இந்த இடத்திற்கு வில்லங்கச் சான்று போட்டு பார்த்ததில் சம்பூர்ணம் தனது மகள்களாகிய சந்திரா புஷ்பா ஆகியோர் பெயரில் விடுதலை பத்திரம் மூலம் போலியான ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து நில பிரச்சனைக் தீர்வு பிரிவு போலீச இன்ஸ்பெக்டர் லதா மகேஸ்வரி துல்லியமாக ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டார் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் போலீசார் குற்றவாளிகளை தலை மறைவாக இருந்த புஷ்பா வயது 49 கணவர் பெயர் தயாளன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காக்களூர் திருவள்ளூர் 2. தனசேகர் வயது 33 தகப்பனார் பெயர் தயாளன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காக்களூர் திருவள்ளூர் ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்