கோவை ரயில் நிலையத்தில் 17 வெளிமாநில மது பாட்டில்களுன் 2 பேர் கைது.

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜவகர் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு வந்த 2பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தில் தயாரிக்கபட்ட 17 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பானு பிரதாப் சிங் ( வயது 26) ஹான்ஸ் ராஜ் (வயது36) என்பது தெரியவந்தது.