மீஞ்சூர், ஆவடி காவல்ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக் கைகளின் தொடர்ச்சியாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீஞ்சூர் அதிரடி போலீஸ் படையினர் மீஞ்சூர் நாவலூர் டி எச் சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக tn 18 bj 4100 என்ற பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த சந்தேக நபரை பிடித்து விசாரணை செய்த போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான ஜர்தா மாவா கலவை கொண்ட 10 கிராம் எடை கொண்ட 200 பாக்கெட்டு கள் சுமார் இரண்டு கிலோ கைபற்றப்பட்டு குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்ததில் அவனது பெயர் கௌதுல் ஆலம் வயது 50. தகப்பனார் பெயர் செய்யது ஆரிப் டி எச் ரோடு இளவம்பேடு பொன்னேரி. மேலே குறிப்பிட்ட போதை பொருட்களை தனது கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக தனது நண்பரான மீஞ்சூர் பேசவுபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளிடம் விசாரணை செய்ததில் கௌதுல் ஆலம் தனது நண்பரான ராஜேஷ் இருவரும் கூட்டாக சேர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து மாவா ஜர்தா மற்றும் சீவல் பாக்குகள் உள்ளிட்ட குட் கா பொருட்களை வாங்கி வந்து மீஞ்சூர் ராஜேஷ் வீட்டில் வைத்து போதைப் பொருட்களை ஒன்றாக வைத்து சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து கௌ துல் ஆல ம் தனது கடையில் வைத்து விற்பனை செய்ததாகவும் குற்றவாளி ராஜேஷ் மீஞ்சூர் பொன்னேரி பகுதிகளில் மோட்டார் சைக்கிளை வைத்து விற்பனை செய்து வந்ததாகவும் அவனது வாக்குமூலத்தின் அடிப்படையில் மீஞ்சூர் கேசபுரத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜேஷ் வீட்டில் சோதனை செய்த போது 75 கிலோ போதை வஸ்து ஜர்தா கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0