கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை செடிகளும் அதிகளவில் உள்ளது.
வனத்தில் வசிக்கக் கூடிய விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் எப்போது யானை தங்கள் பகுதிக்குள் வருமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் வசித்து வருகிறார்கள்.
வால்பாறை புதுக்காடு எஸ்டேட் பகுதியையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சம்பவத்தன்று இந்த வனத்தில் இருந்து சில யானைகள் கூட்டமாக வெளியில் வந்தன. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிந்து விட்டு மீண்டும் வனத்தை நோக்கி யானைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது யானை கூட்டத்தில் இருந்த 2 யானைகளை தவிர மற்ற யானைகள் வனத்திற்குள் சென்று விட்டது. இந்த 2 யானைகளும் தேயிலை தோட்டத்தையொட்டியே வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து யானைகள் பிளிறல் சத்தம் அதிகம் கேட்டது.
இதனால் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது 2 யானைகள் ஒன்றுக்கொன்று தலையால் முட்டி மோதி சண்டையிட்டு கொண்டிருந்தன. 2 யானைகளும் மிகவும் ஆக்ரோஷமாகவே காணப்பட்டது. இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் 2 யானைகளில் ஒரு யானை அங்கிருந்து விலகி செல்ல முற்பட்டது. ஆனால் மற்றொரு யானை விலகி செல்லும் யானையிடம் சென்று மோதலில் ஈடுபட்டது.
சுமார் 15 நிமிடங்கள் 2 யானைகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டன. யானைகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டு கொண்ட காட்சியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர். பின்னர் அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டனர். தற்போது