கோவை துடியலூர் அருகே உள்ள உரு மாண்டம்பாளையம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நந்தினி ( வயது 21) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .பி. ஏ .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் நேற்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் இது குறித்து அவர் தாயார் ஜெயந்தி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதேபோல பொள்ளாச்சி பக்கம் உள்ள அங்கல குறிச்சி, புது காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் சரண்யா ( வயது 18) பீளமேட்டில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்துஅவரது தாயார் நிர்மலா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.