கோவையில் வட மாநில தொழிலாளிகொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

கோவை; ராம்நகர், ராமச்சந்திரா லேஅவுட்டில்சுந்தர் என்பவருக்கு சொந்த மான கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு (வயது 18) என்பவரும் டைல்ஸ் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி தொழிலாளர்களுடன் கட்டிடத்தின் போட்டிகோவில் ரிங்கு குமார் படுத்து தூங்கி கொண்ருந்தார். அப்போது அங்கு பைக்கில் 2 ஆசாமிகள்வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து இவரிடம் செல்போனை கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி தான் மறைத்திருந்த கத்தியால் ரிங்கு குமாரின் கழுத்தில் குத்தினார்..உடனே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் .அதற்குள் அந்த இரு ஆசாமிகளும்செல்போனை பறித்து விட்டு பைக்கில் தப்பி ஓடி விட்டனர். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார்  செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில். உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் ,சிவக்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி மதுரை தத்தனேரியை சேர்ந்த பாலமுருகன் (வயது 19)அஞ்சல் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் ( வயது 19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களில் பாலமுருகன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.. இவரது நண்பர் ஈஸ்வரன்மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கோவையில் வாடகைக்கு அறை எடுத்து பாலமுருகன் தங்கி இருந்தார். இவரது நண்பர் ஈஸ்வரன்கடந்த வாரம் மதுரையிலிருந்து கோவைக்கு வந்தார் இருவரும் மோட்டார் சைக்கிளில் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர் இருவரும் கடந்த 7-ந் தேதி அதிகாலை கொள்ளையடிக்க திட்டமிட்டு ராம் நகரில் உள்ள ராமச்சந்திரா லேஅவுட் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரிங்குமாரின் செல்போனை திருடும்போது அவர் கண்விழித்து சத்தம் போட்டார் .அதனால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு செல்போனை பறித்து க்கொண்டு ஓடிவிட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய விஷால் என்பவரை தேடி வருகிறார்கள். கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.