கோவை பீளமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் நேற்று நவ இந்தியா ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள்பேரூர் மகாதேவபுரம், குறிஞ்சிநகரை சேர்ந்த விபீஷ்ணன் ( வயது 22) காளம் பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ( வயது 26) என்பது தெரியவந்தது. இவர்களில் வி பிஷ்ணன் பி எஸ். சி படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜெய் ஹிந்த் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0