வீட்டு தரகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது.

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது.இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி வாடகைக்கு குடியிருந்து வந்தார்.இந்த நிலையில் இவரதுவீட்டில் முதல் தளத்தில் வசித்து வரும்வின்சி வில்லியம்ஸ் என்பவர் ஜெயந்திக்கு போன் செய்து கருப்பசாமி என்ற கோபி குடியிருந்த வீடு திறந்து கிடப்பதாகவும்,அங்கு ஒருவர் ரத்த காயத்துடன் கிடப்பதாகவும் தகவல் தெரிவித்தார் .இது குறித்து ஜெயந்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தவர் உடலை மீட்டு மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் இது தொடர்பாக கோபி, ஜோசி ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தனர்.இருவரும் சிங்காநல்லூர் காவல்நிலத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர்இரு கூர்,இந்திரா நகர், மேற்கு வீதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ( வயது 59) என்பது தெரியவந்தது .இவர் வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுக்கும் தரகர் தொழில் செய்து வந்தார். இவரிடம் கருப்புசாமி என்ற கோபி தனக்கு போக்கியத்துக்கு வீடு பார்த்து தருமாறு கேட்டார். அதற்கு முத்துகிருஷ்ணன் தனக்கு தெரிந்த பல வீடுகள் உள்ளன. விரைவில் நல்ல வீடாக பார்த்து தருகிறேன் என்று கூறினார். உடனே அவரிடம் ரூ.1 லட்சத்தை கோபி கொடுத்தார். ஆனால் அவர் பல நாட்கள் ஆகியும் வீடு பார்த்து கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டபோது சரியான பதில் சொல்லவில்லை இதனால் முத்துகிருஷ்ணன் எனக்கு நீ போக்கியத்துக்கு வீடு பார்த்து கொடுக்க வேண்டாம் .நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விடு என்று கேட்டார ஆனால் பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்தார்.இந்த நிலையில் முத்துகிருஷ்ணனை கோபி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு மது சாப்பிட வருமாறு கூறினார்.அங்கு கோபிமற்றும் அவரது நண்பரான கேரள மாநிலம் ,இடுக்கியை சேர்ந்த ஜோசி (வயது 33)முத்துகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக மது அருந்தினர்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபி மற்றும் ஜோசி ஆகியோர் சேந்ந்து ஒரு மரக்கட்டையை எடுத்து முத்துகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினார்கள். அதில் படுகாயம் அடைந்த முத்து கிருஷ்ணன் அதே இடத்தில் இறந்தார்.என்பது தெரிய வந்தது.. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் .இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.