சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்ல 2 வது பிளாட்பார்மில் இரவு 10.30 மணிக்கு சுப்பராயன் மகன் பாண்டியராஜன் வயது 40. விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூர் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க 4 பேர் பளபளக்கும் கத்தியை காண்பித்து என்ன நைனா இந்த ராத்திரிக்கு எங்க போற இருக்கிற பணத்தையும் செல்போனையும் கொடுத்து விடு. இல்லையென்றால் நீ அம்பேல்தான். என மிரட்டி விட்டு பாண்டியராஜன் இடமிருந்து ரூ 7000 மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் பிடுங்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பாண்டியராஜன் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத் தனர். இதுகுறித்து ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா நேரடி மேற்பார்வையில் ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் மற்றும் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் முன்னிலையில் எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப் பி ரெண்ட் ரமேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீஸ் தனிபடையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக துப்புத் துலக்கி வலை வீசி தேடி வந்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணிச்சல் மிக்க கொள்ளையர்கள் 1.தங்கராஜ் என்கிற ராஜி பாய் வயது 21. தகப்பனார் பெயர் கண்ணன். அழகிரி தெரு ஆலந்தூர் சென்னை.2. கார்த்திக் வயது 21.தகப்பனார் பெயர் ரவிச்சந்திரன் வ.உ. சி. நகர் 2 வது தெருஆலந்தூர் சென்னை. மற்றும் இரண்டு சிறார்களை சென்னை கோட்டை ரயில் நிலைய பிளாட்பார்மில் வைத்து கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் மற்றும் ரொக்க பணம் 4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இளஞ்சிறா ரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக் கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0