கோவை மே 13 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைசேர்ந்த மாடசாமி மகன் இசக்கி மாரி செல்வம் (21) மற்றும். கைலாசம் மகன் பாதாளம் (19) . இவர்கள் இருவரும்கிணத்துக்கிடவு பகுதியில் தங்கிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.கடந்த 25 -3 – 20 24 அன்று.கொண்டம்பட்டி பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28)ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காகஇவர்களைகிணத்துக்கடவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இசக்கி மாரி செல்வம், (21) மற்றும் பாதாளம் (19) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளிகளான இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய 2 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில்24 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0