கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவ மனையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவமனை வளாகம் ,டோக்கன் வழங்கும் இடம், நுழைவாயில், உறவினர்கள் ஓய்வு எடுக்கும் இடங்கள், அரசு மருத்துவ மனையை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 182 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் காவல்துறை சார்பில் 32 கேமராக்களும்,மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புதிய கட்டிடத்தில் 150 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராக்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா க்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, துணை கமிஷனர் சரவணகுமார் ,உதவி கமிஷனர் கணேசன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் உட்படபலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0