கோவை, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில்கோவை மண்டல காவல் கண்காணிப் பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுத்துறை போலீசார் நேற்று முன்தினம் கோவை சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவர் மாச்சநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் (40)கைது செய்யப்பட்டார். விசாரணையில்ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசி மூட்டை களின் உரிமையாளர் சுந்த ராபுரம் முத்தையா நகரை சேர்ந்த தனகோபால்சாமி மகன் இமய நாதன்(44) என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மேலும் நேற்று கோவை – பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை மார்க்கெட் “மிலிட்டரி ” முகாம் அருகில் அத்யாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக கண்காணித்த போது “அபே ” ஆட்டோவில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மாருதி ஆம்னி காரில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்த கேரள மாநிலம் வேலந்தா வளம் சுண்ணாம்புக்கல் தோடு அலெக் ஸாண்டர் மகன் அமல்லூர் பவம் (30) மற்றும் கோயம்புத்தூர் பீளமேடு சங்கர் மகன் லோகேஷ் (27) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது பீளமேடு, காந்திபுரம் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரள மாநிலம் கஞ்சிக்கோடு முகமது என்பவர் மகன் ஜாகிர் உசேன் (45) என்பவருக்கு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. 2 வழக்குகளில் 3 வாகனங்கள் மற்றும் 2 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள்நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டனர் .
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0