ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை அதன் 15 சதவிகித வலிமையை உக்ரைனுடனான போரில் இழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 வது மாதமாக தொடரும் நிலையில், கிட்டத்தட்ட 1 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்சனையும் உக்ரைனிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக ஜனாதிபதி புடினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கெர்சனை இழந்தது பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் ரஷ்யாவிற்கு கூடுதல் இழப்பாக பார்க்கப்படுகிறது.
அந்த தகவலின் படி, உக்ரைனுடனான போரில் ரஷ்யா வந்து கருங்கடல் கடற் படையின் 15 சதவிகித வலிமையை இழந்து இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதில் குறைந்தது 12 போர் கப்பல்கள் மற்றும் படகுகள் மூழ்கியுள்ளன அல்லது கடுமையாக சேதமடைந்து உள்ளன என தெரியவந்துள்ளது.
உடனான போரில் ரஷ்யா தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் இந்த நிலையில் ஜனாதிபதி புடின் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் இலக்குகளை அடைய, ஜனாதிபதி புடின் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார்.