கோவை சூலூர் பக்கம் உள்ள மைலம்பட்டியில் வசித்து வருபவர் சரவணகுமார் (வயது 43) இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சரவணகுமார் தனது குடும்பத்துடன் குன்னூர் சென்றார். அங்கிருந்து நேற்று மாலை சூலூர் திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களை சிதறி கிடந்தன .மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து சரவணகுமார் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad2
Happy2
Sleepy1
Angry0
Dead0
Wink1