போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த சூதாட்ட கும்பல் 14 பேர் கைது.

கோவை கரும்புக்கடை பக்கம் உள்ள புட்டு விக்கி ரோட்டில் ஒரு கோவில் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கரும்பு கடை போலீசுக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்பு இன்ஸ்பெக்டர் கோபிநாதன் ஆகி போர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம்வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்குஹவுசிங் யூனிட் சேர்ந்த சேர்ந்த பரோஸ்கான் (வயது 38) மன்சூர் ரகுமான் ( வயது 27) அக்கீம் ( வயது 29) குனியமுத்தூர் நசீர் (வயது 35) செல்வபுரம் சிராஜுதீன் (வயது 39) கிணத்துக்கடவு சபரிநாதன் ( வயது 29) செல்வபுரம் முகமத் ஹாரிஸ் ( வயது 27) உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ24 ஆயிரம், 3 இருசக்கர வாகனம் ஒரு கார், 14 செல்போன் கைப்பற்றப்பட்டது. இந்த கும்பலை மடக்கி பிடித்த போது போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது இதை யடுத்து.இந்த கும்பலை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2பேர் தப்பி ஓடி விட்டனர்.இது யடுத்து 15 பேர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாதுதடுத்தல், சூதாட்டம் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.