சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பினா கினி எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 கிலோ 500 கிராம் கஞ்சா

சென்னை:சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக ரயில்வே காவல்துறையின் ஏ டிஜிபி வனிதா உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டி ஐ ஜி அபிஷேக் தீக் க்ஷித் மேற்பார்வையில் ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் ஈஸ்வரன் முன்னிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி முதல் நிலை காவலர் ராம்குமார் காவலர்கள் வெங்கடேசன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது நடைமேடையில் விஜயவாடாவில் இருந்து சென்ட்ரலுக்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் வந்து இறங்கிய பயணிகளை சோதனை போட்டனர். அவர்கள் வைத்திருந்த பையில் 14 கிலோ 500 கிராம் இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு 1.குணசேகரன் வயது 41. தகப்பனார் பெயர் மொக்கச்சாமி. தேவதானப்பட்டி. மஞ்சளார் அணை.பெரியகுளம்.தேனி மாவட்டம்.2.பிரவீன் வயது 23. தகப்பனார் பெயர் குழந்தைவேல். பிள்ளையார் கோவில் தெரு. நவமால் மருதூர்.கண்டமங்கலம். விழுப்புரம். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டன ர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.