எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி பெண்னிடம்ரூ 14 .75 லட்சம் மோசடி.

கோவை ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (வயது 50) சர்வீஸ் இன்ஜினியர்.இவரது மகள் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்.இந்த நிலையில் அவரது உறவினர் மூலமாக கோவையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சாந்திக்கு அறிமுகமானார் .அவர் தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் தங்கள் மகளை சேர்த்து விடுகிறேன் என்று கூறி ரு 61 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். மருத்துவ கல்லூரியில் எம்.பி பி . எஸ். சீட் வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் சாந்தி தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார் இதில் ஸ்ரீதர் ரூ 47 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதிரூ 14, லட்சத்து 75 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.இதுகுறித்து சாந்தி இராமநாதபுரம் போலீசில்புகார் செய்தார் .போலீசார் ஸ்ரீதர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.