கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40) இவர் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கார்த்திக் குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனதுஉறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து செல்போனில் கார்த்திக் கிடம் தகவல் கொடுத்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் கார்த்திக் அவசரமா அவசரமாக குடும்பத்தினருடன் புறப்பட்டு பொள்ளாச்சி வந்தார். அப்போது அவர்கள் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும்உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது பீரோவில் இருந்த 136 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடி டிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து டாக்டர் கார்த்திக் மகாலிங்கபுரம் காவல் நிலையத் தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் வீட்டில் நகை – பணத்தை கொள்ளை யடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0