நீலகிரி மாவட்டத்திற்கு 13 புதிய BS IV பேருந்து இயக்கம்…

நீலகிரி மாவட்ட உதகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 2022-2023 ஆண்டுகளில் 1000 புதிய BS VI பேருந்துகளும், 2023-2024 ஆண்டுகளில் 1000 புதிய BS VI பேருந்துகளும் கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு 283 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் நீலகிரி மண்டலத்திற்கு 13 புதிய BS IV பேருந்துகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று உதகை மத்திய பேருந்து
நிலையத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற
உறுப்பினர் ஆ. இராசா ஆகியோர்கள் புதிய பேருந்துகளின் இயக்கத்தினை
கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்., புதியதாக இயக்கப்படும் பருந்துகள்
உதகையிலிருந்து தஞ்சாவூருக்கு குன்னூர், மேட்டுப்பாளையம், திருப்பூர்,
கரூர், திருச்சி வழியாக இன்று முதல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில்
கைப்பேசி ரிசார்ஜ் செய்யும் வசதி, அவசர கால கதவு பட்டன்கள், ஸ்டாப் சுவிட்ச்,
வசதியான இருக்கைகள், கடைசி இருக்கையில் சீட் பெல்ட், முதலுதவி பெட்டி,
உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்
மூலமாக பெறப்பட்ட மனுவின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் பழைய அருவங்காடு
ஊருக்கு மாலை 4:30 மணிக்கு குன்னூரிலிருந்து அருவங்காடு வழியாக எல்லநள்ளிக்கு கூடுதல் நடை பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், நகரமன்றத்தலைவர்கள் வாணீஸ்வரி (உதகை), பரிமளா(கூடலூர்), சிவகாமி (நெல்லியாளம்), குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர்
வசீம் ராஜா, ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன் (எ) மாதன் (உதகை),
சுனிதா நேரு (குன்னூர்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர்
திரு.நடராஜ், உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.மகராஜ், உதகை வட்டாட்சியர்
திரு.சரவணகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பிரவீணாதேவி,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) திருமதி.ஷோபனா,
உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.