வேனில் கடத்தப்பட்ட 120 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது.

கோவை மாவட்டம், அன்னூர் தர்மர்கோவில் அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா,சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த மீனம்பாளையம் பார்த்திபன் (வயது 35) வெள்ளக்கிணறு பாலசுப்பிரமணியம் ( வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.