ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட எந்தப் பகுதிகளிலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை விற்பதோ கடத்திக் கொண்டு வருவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் அசத்தல் நாயகன்கி. சங்கர் அதிரடி உத்தரவின் பேரில் பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிலையத்தில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் ராதாவிற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மஜா ஏற்படுத்தும் சூப்பர் கஞ்சா கடத்திக் கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது 2 மர்ம ஆசாமிகள் கருப்பு நிற சோல்டர் பேக்கை தோளில் சுமந்து கொண்டு வந்தனர். அவர்களை மடக்கி பிடித்த சப் இன்ஸ்பெக்டர் ராதா பக்கத்தில் இருக்கிற காலேஜில் தான் நானும் வேலை செய்கிறேன் ஏதாவது ஐட்டம் இருந்தால் ரேட் கொஞ்சம் பார்த்துப் போடப்பா என கெஞ்சினார் மர்ம ஆ சாமியோ வந்திருப்பது மாறுவேடத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் என தெரியாமல் ஏம்மா காய்கறி வியாபாரமா கத்திரிக்காய் வியாபாரமா நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கொண்டு வந்திருக்கிறோம் மொத்தமாக 12 கிலோ கஞ்சா இருக்கிறது உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் ஒரு ரேட் பிக்ஸ் செய்து தருகிறோம் பணத்தை எடும்மா நாங்கள் ஊருக்குப் போக வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கும்போது சைகை காண்பித்த மப்டி சப்ஸ்பெக்டர் ராதா சீக்கிரமாகட்டும் எனக் குரல் கொடுத்தார் மறைந்திருந்த போலீசாரும் மர்ம அசாமி களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் அவர்கள் பெயர் விவரம் வருமாறு 1. சுடலை மணிகண்டன் வயது 23 தகப்பனார் பெயர் முத்தையா வ.ம. கோயில் தெரு கீ மு ர் தூத்துக்குடி மாவட்டம் 2. முத்துராஜ்வயது 45 தகப்பனார் பெயர் செல்லப்பா வடக்கு ரத வீதி மேலச்செவல் திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0