சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆறு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நிர்வாக காரணங்களுக்காக பொதுவாக ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.. அதுபோல இப்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாகத் திருப்பத்தூர் திருவண்ணாமலை சேலம், தென்காசி செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அது தவிரத் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் இப்போது வேளாண் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர லட்சுமி ஐஏஎஸ், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0