வீடுகளில் கொள்ளை நடத்ததிட்டம் தீட்டிய 11 பேர் கைது .

கோவை அருகே உள்ள கோவைபுதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜாஆகியோர்நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பல்பிடித்துவிசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் இவர்கள்.கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்துவதற்கு திட்டம் தீட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து 11 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகமத் யாதின் ( வயது 40 ) சுனில் (வயது 45) கண்ணூர் அப்துல் கரீம் (வயது 47 )திருப்பூர் மங்கலம் சலீம் மாலிக் (வயது 25) ஷாஜகான் (வயது 26 7கேரள மாநிலம் கண்ணூர் சாமல் ( வயது 46, )கர்நாடகவைச் சேர்ந்த நவ்பீல் காசிம் ஷேக் (வயது 29) திருப்பூர் காங்கேயம் முகமது யாசீர் (வயது 18 )என்பது தெரிய வந்தது. சரவணன் என்பவர் தப்பி ஓடி விட்டார். கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.