கோவை; சூலூர் செங்கத்துறையில் கடந்த 21 ஆண்டு காலமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவினை முன்னாள் அமைச்சர், கோயமுத்தூர் மேயர் செ.ம. வேலுச்சாமி ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 108 ஆவது பிறந்த நாளை 40க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும், கோப்பைகளும் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தலைமை அரசு கொறடா எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார். செ.ம. வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி, அகில இந்திய எம் ஜி ஆர் மன்ற செயலாளர் தோப்பு அசோகன், முன்னாள் முத்து கவுண்ட புதூர் ஊராட்சி தலைவர் வி. பி. கந்தவேல், செங்கத்துறை சின்னச்சாமி, அசோக் குமார் மற்றும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களும் வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0