கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் ஆலோசனைக்கிணங்க ரொட்டிக்கடை பகுதியில் உள்ள டாக்டர் எம்ஜிஆரின் திரு உருவச் சிலைக்கு நகர துணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன், பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், ஐடி விங்க் நகரச்செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர பேரவை இணைச்செயலாளர் சசிக்குமார், வர்த்தக அணி சண்முகவேல், செல்கணேசன், வார்டு கழக செயலாளர்கள் எம்.ஆர்.எஸ்.மோகன், எஸ்.கே.எஸ்.பாலு, கொங்கு மாரிமுத்து, அருணாச்சலம், ரமேஷ் நிர்வாகிகள் கருமலை விமலா, சிடிசி பிரபாகரனின், யூசப், பழனியாண்டி, பழனி, விஸ்வநாதன், நடராஜ் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0