கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை நகரில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் சார்பில்பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது .மத்திய அரசின் நிர்பயா நிதியை பயன்படுத்தி நகரில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி கோவை மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சி மூலம் ரூ.107 கோடியில் திட்டங்கள் செயல்படுத்த அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அரசு டவுன் பஸ்கள், நகரில் உள்ள 343 பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்கள் உட்பட பெண்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் முக்கிய வீதிகளில் பாதுகாப்புத் தூண் அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வு தகவல் தெரிவிப்பது, ஆபத்து என்றால் பொத்தானை அழுத்தி அந்த தூண்களில் உள்ள ஒலிப்பதிவு கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறும். கோவை மாநகர காவல் துறை சார்பில் ரூ 78 கோடி செலவிலும், மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்கரு 29 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி வந்ததும் பணிகள் தொடங்கப்படும். தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது .இதன்படி நகரில் இயங்கும் 149 தனியார் டவுன் பஸ் களில் 122 பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது .நீண்ட தூரம் இயக்கப்படும் 87 தனியார் பஸ் களில் 79பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது .புறநகர் பகுதிகளில் இருந்து கோவை க்கு இயக்கப்படும் 30 தனியார் பஸ்களில் 20 பஸ்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்த உத்திரவிப்பட்டுள்ளது. பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம் பல்வேறு குற்ற செயல்களை தடுக்கவும் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0