சித்ரா பௌர்ணமி 106 ஆம் ஆண்டு விழா.

சித்திர புத்திர ஸ்வாமி தங்காத்தாள் குலதெய்வ வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நிகழ்வினை சிறப்பாக பூஜை செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 106ஆம் ஆண்டு விழாவாக சூலூர் நொய்யல் ஆற்றங் கரையிலிருந்து தங்காத்தாள் கரகம், சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு தீர்த்தகுடங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு திருக்கோவில் மணவறையில் சித்திரபுத்திர சுவாமி, ஸ்ரீ தங்காத்தாள்சுவாமி , கன்னிமார், கருப்புசாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பொங்கல் படைத்து பூஜை மற்றும் சித்ர புத்திர நாராயணன் சரித்திரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா குழுவினர் ,காங்கேய நாட்டு குலால மக்கள், மகளிர் அணி, இளைஞரணி திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் தொடர்ந்து இரவு வள்ளி கும்மி நடனம் அரங்கேற்றம் செய்து சித்ரா பௌர்ணமி விழாவினை கொண்டாடினர்.