வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க மது பிரியர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது. ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இந்நிலையில் விரைவில் ‘டாஸ்மாக்’ கடைகளில் 100% கோதுமை பீர் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மது கடைகளில், 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன. மேலும், புதிய வகை மதுபானங்களை விற்குமாறு, டாஸ்மாக்கிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, ‘100% வீட் பீர்’ என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், பிரபல பிராண்ட் ஆன ‘காப்டர்’ தயாரிப்பில், ‘செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்’ வகைகளை விற்பதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த பீர் வகைகள், விரைவில் மது கடைகளில் கிடைக்க உள்ளன. ‘வீட்’ பீர் விலை, 190 ரூபாய் மற்றும் காப்டர் வகை பீர்கள், 160 ரூபாய் – 170 ரூபாய் விலையில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0