கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வழியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 56 )விவசாயி. இவரது மனைவி சுதா. கடந்த 30ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பினார். அப் போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டுதிறந்து கிடந்தது. அதில் இருந்த 100பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆ சாமிகள்திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பாளையம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத் தை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பார்வையிட்டார். கொள்ளையர் களை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0