10% இட ஒதுக்கீடு: நவ-12-ல் அனைத்து கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு..!

10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நவம்பர் 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாப்களின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று 10% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நவம்பர் 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.