தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

மிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.150 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி திரூப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அரியலூர், நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மதுரை மாவட்டத்தில் மேலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.