கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 900 மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவி ஒருவருக்கு உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார.அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி அங்குள்ள ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் அந்த பள்ளியில் பணியாற்றி வந்த 6ஆசிரியர்கள் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது .இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 10 ஆசிரியர்கள்கூண்டோடு இடம்பாற்றம் செய்யப்பட்டனர் .இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கடந்த 2நாட்களுக்கு முன்பு மேற்கொண்டனர். கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கள் கிழமை) பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10 ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0