ஷேர் மார்க்கெட் டிரேடிங் முதலீடு ரூபாய் 60 லட்சம் போட்டால் 1 கோடியே 20 லட்சம் லாபம். ஒருவர் கைது

ஆவடி, கேரளா மாநிலம் கேடி உ மேஷ் குமார் என்பவன் தமிழகத்தின் மீது கண் வைத்துக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் ஆசை வார்த்தை கூறி சாக்கு பைகளில் பணத்தை எப்படி அள்ளலாம் என்ற வெறியோடு ஒரு கும்பல் அலைந்து திரிந்து வருகிறது. இதைப் பற்றிய விவரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்பு முகாமில் ஜே. கிளாட் வின் கொடுத்த புகார் மனு தன்னுடைய தகப்பனார் பெயர் ஜான். ஒரகடம் பகுதியில் காந்தி மெயின் ரோடு அம்பத்தூர் சென்னை.என்ற முகவரியில் சொந்த வீட்டில் வசிப்பதாகவும் தன் வீட்டின் மேல் மாடியில் 2021ம் வருடம் வீடு கட்டிட hdfc வங்கியில் வீடு கட்டிட கடனாக ரூபாய் 16 லட்சம் பெற்றேன். இதை நண்பர்கள் என்ற முறையில் உமேஷ் குமாரிடம் தெரிவித்தேன்.