1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வருடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து நேரடியாக தேர்விற்கு வரவழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக்கு பின்னர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை என்றும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.